ரயில் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயா ரயில் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் நானு ஓயாவிலிருந்து இயக்கப்படும் விசேட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏற்கனவே ரயிலில் ஆசனங்கள் முற்பதிவு செய்த உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்
மேலும் இனி வரும் நாட்களில் இவ்வாறான பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும் போது பொது மக்களின் நலன் கருதி பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம்- பயணிகள் விசனம் ரயில் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயா ரயில் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் நானு ஓயாவிலிருந்து இயக்கப்படும் விசேட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இன்று காலை நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏற்கனவே ரயிலில் ஆசனங்கள் முற்பதிவு செய்த உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்மேலும் இனி வரும் நாட்களில் இவ்வாறான பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும் போது பொது மக்களின் நலன் கருதி பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது