பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
வேதன அதிகரிப்பு கோரிக்கை; பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்க வேண்டும்-பிரதி அமைச்சர் வேண்டுகோள். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.கொட்டகலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.