• May 23 2025

உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்!

Chithra / May 22nd 2025, 3:44 pm
image

 

இறக்குமதி செய்யப்படவிருந்த உப்பு நாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 

இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படவிருந்த 2,800 மெற்றிக் தொன் உப்பு ஆகியவற்றைக் கொண்ட 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக உப்பு இறக்குமதி சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் அதன் பிறகு உப்பு தொடர்ந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

உப்பு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்  இறக்குமதி செய்யப்படவிருந்த உப்பு நாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படவிருந்த 2,800 மெற்றிக் தொன் உப்பு ஆகியவற்றைக் கொண்ட 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், சீரற்ற காலநிலை காரணமாக உப்பு இறக்குமதி சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் அதன் பிறகு உப்பு தொடர்ந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement