• Aug 25 2025

எஸ்.ரி.எவ் , பொலிஸை கண்டால் ஓடுவது போல; நிதி நிறுவன ஊழியர்களை கண்டால் சனம் ஓடுது! - தவிசாளர் வினோராஜ்

shanuja / Aug 25th 2025, 2:33 pm
image

அந்த காலத்தில் எஸ்.ரி.எவ் , பொலிஸை கண்டால் ஓடுவது போல , தற்போது  நிதி நிறுவனங்களின் ஊழியர்களைக் கண்டால் சனம் ஓடுது என்று மண்முனை தென் எருவில் பற்று  தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார். 


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுண் கடன் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில்  இன்று (25) இடம்பெற்றது.


இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அனைத்து , நிதி நிறுவன ஆவணங்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட வேண்டும் .மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும். 


இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் மக்கள் நலன் கருதி  உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக பூட்டப்படும்.- என்றார்.

எஸ்.ரி.எவ் , பொலிஸை கண்டால் ஓடுவது போல; நிதி நிறுவன ஊழியர்களை கண்டால் சனம் ஓடுது - தவிசாளர் வினோராஜ் அந்த காலத்தில் எஸ்.ரி.எவ் , பொலிஸை கண்டால் ஓடுவது போல , தற்போது  நிதி நிறுவனங்களின் ஊழியர்களைக் கண்டால் சனம் ஓடுது என்று மண்முனை தென் எருவில் பற்று  தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுண் கடன் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில்  இன்று (25) இடம்பெற்றது.இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து , நிதி நிறுவன ஆவணங்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட வேண்டும் .மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் மக்கள் நலன் கருதி  உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக பூட்டப்படும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement