இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பாதுகாப்புகளை அடிப்படையாக கொண்டு27ஆம் தேதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் யாழ். சிறைக்கு மாற்றம் இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை பாதுகாப்புகளை அடிப்படையாக கொண்டு27ஆம் தேதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது