• Jul 08 2025

இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு வீழ்ச்சி

Chithra / Jul 8th 2025, 2:48 pm
image


2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 3.3 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார குறிகாட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

அதேநேரம் 2025 மே மாதம் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 6.28 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது. 

அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்தமையின் காரணமாகவே, இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு வீழ்ச்சி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 3.3 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார குறிகாட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேநேரம் 2025 மே மாதம் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 6.28 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது. அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்தமையின் காரணமாகவே, இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement