வவுனியா விபுலானந்த கல்லூரிக்கு விளையாட்டு மைதானத்திற்கான காணி வழங்குவதற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (02.07) மாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு விவசாய காணியினை மைதானத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கமநல அபிவிருத்தி திணைக்களம் அதனை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. காணி ஆணையாளருக்கும் விடுவித்து தருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே பிரதேச செயலக மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனை விடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரினார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அக் காணியை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வவுனியா விபுலானந்த கல்லூரி மைதானத்திற்கு காணி வழங்க தீர்மானம் வவுனியா விபுலானந்த கல்லூரிக்கு விளையாட்டு மைதானத்திற்கான காணி வழங்குவதற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (02.07) மாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு விவசாய காணியினை மைதானத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்களம் அதனை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. காணி ஆணையாளருக்கும் விடுவித்து தருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.எனவே பிரதேச செயலக மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனை விடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரினார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அக் காணியை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.