• May 17 2025

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை

Chithra / May 16th 2025, 11:01 am
image

 

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது.

இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை  ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது.இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement