• May 16 2025

வெருகல் பிரதேச சபையில் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் கடிதம் அனுப்பி வைப்பு!

Thansita / May 15th 2025, 9:41 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தில் இருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பாக கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் செயலாளர்களுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் 2 உறுப்பினர்களுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு தேர்தல் சட்டத்திற்கு அமைவாகக் கோரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் கிடைத்துள்ள 2 உறுப்பினர்களையும் பெண் உறுப்பினர்களாக நியமிக்குமாறும், தேசிய மக்கள் சக்திக்கு மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் கிடைத்துள்ள 2 உறுப்பினர்களின், ஒரு பெண் உறுப்பினரை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேச சபையில் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் கடிதம் அனுப்பி வைப்பு திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தில் இருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பாக கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் செயலாளர்களுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் 2 உறுப்பினர்களுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு தேர்தல் சட்டத்திற்கு அமைவாகக் கோரப்பட்டுள்ளது.அதனடிப்படையில், வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் கிடைத்துள்ள 2 உறுப்பினர்களையும் பெண் உறுப்பினர்களாக நியமிக்குமாறும், தேசிய மக்கள் சக்திக்கு மேலதிக நியமன பத்திரத்தின் மூலம் கிடைத்துள்ள 2 உறுப்பினர்களின், ஒரு பெண் உறுப்பினரை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement