• May 16 2025

யாழ் செம்மணியில் பரபரப்பு: ஆரம்பமான அகழ்வு பணிகள்..!

Sharmi / May 15th 2025, 4:39 pm
image

அரியாலை செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். 

இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அங்கு அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்றைய அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு,  மனித சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன.
 
தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








யாழ் செம்மணியில் பரபரப்பு: ஆரம்பமான அகழ்வு பணிகள். அரியாலை செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அங்கு அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் இன்றைய அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு,  மனித சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன. தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement