நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 14 பேர் காயமடைந்ததுடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பலத்த காற்றுடன் தொடரும் அடைமழை காரணமாக மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய ஹெலிகொப்டர் பிரிவு ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை புரட்டிப்போட்ட புயல்; 56 பேர் பலி - பலர் மாயம் நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 14 பேர் காயமடைந்ததுடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பலத்த காற்றுடன் தொடரும் அடைமழை காரணமாக மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய ஹெலிகொப்டர் பிரிவு ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.