யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (26) உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்கு - அல்வாய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிரதீபன் டக்சிகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 22ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலை குணப்படுத்த தாயார் கை வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் காய்ச்சல் வீரியமான நிலையில் 25ஆம் திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
எலிக்காய்ச்சலால் பறிபோன சிறுவனின் உயிர். யாழில் துயரம் யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (26) உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு - அல்வாய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிரதீபன் டக்சிகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 22ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலை குணப்படுத்த தாயார் கை வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் காய்ச்சல் வீரியமான நிலையில் 25ஆம் திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.