• Nov 28 2025

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு- உடனடியாக வான்கதவுகள் திறப்பு!

dileesiya / Nov 28th 2025, 11:22 am
image

கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வருகிற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து   கொண்டிருப்பதனால்,  இன்று (28) குளத்தின் பத்து  வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

நான்கு அடிக்கு மூன்று வான் கதவுகளும், மூன்று அடிக்கு ஆறு வான் கதவுகளும், தலா இரண்டு அடிக்கு இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டன, இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுகின்றது.

இதே வேளை ,கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு   114,000 ஏக்கர் அடியாகும். 

ஆனால் தற்போது கந்தளாய் குளத்தில் 1113,222  கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக, தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு- உடனடியாக வான்கதவுகள் திறப்பு கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வருகிற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து   கொண்டிருப்பதனால்,  இன்று (28) குளத்தின் பத்து  வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நான்கு அடிக்கு மூன்று வான் கதவுகளும், மூன்று அடிக்கு ஆறு வான் கதவுகளும், தலா இரண்டு அடிக்கு இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டன, இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுகின்றது.இதே வேளை ,கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு   114,000 ஏக்கர் அடியாகும். ஆனால் தற்போது கந்தளாய் குளத்தில் 1113,222  கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக, தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement