நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள கனமழை மற்றும் புயலால் நாட்டின் அனைத்து சேவைகளும் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் A-9 வீதிப்போக்குவரத்து ஓமந்தையோடு தடை செய்யப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து செல்லும் ரயில் சேவை, அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய சேவை குருநாகலோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையடுத்து இன்றைய தினம் (28) யாழ்ப்பாணம்- சென்னை Indigo விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு சென்றவர்கள் அடுத்துவரும் சில நாட்களுக்கு அந்தந்த இடங்களிலேயே பாதுகாப்பாக தங்கியிருப்பதே பொருத்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பயணத்தில் ஈடுபட்டு இடைவழியே நிற்பவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளை ரயில், போக்குவரத்து திணைக்களங்கள் துரிதப்படுத்த வேண்டும்.
மக்களே தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வெளி நடமாட்டங்களை தவிர்க்கவும். பாதுகாப்பான சூழலில் இருக்கும் இயலுமானவர்கள் அண்மித்த இடங்களில் தேவைப்படும் மீட்புப்பணிகளில் கைகொடுக்கவும்.
மிக முக்கியமாக, விசை கூடிய மோட்டார்சைக்கிள்களில் முறுக்கியபடி மழையில் விடுப்பு பார்க்கவும் ரீல்ஸ் எடுக்கவும் புறப்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கனமழை ஏ-9 வீதி போக்குவரத்து தடை; விமானம், ரயில் சேவைகளும் இரத்து நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள கனமழை மற்றும் புயலால் நாட்டின் அனைத்து சேவைகளும் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் A-9 வீதிப்போக்குவரத்து ஓமந்தையோடு தடை செய்யப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து செல்லும் ரயில் சேவை, அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய சேவை குருநாகலோடு நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான காலநிலையடுத்து இன்றைய தினம் (28) யாழ்ப்பாணம்- சென்னை Indigo விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு சென்றவர்கள் அடுத்துவரும் சில நாட்களுக்கு அந்தந்த இடங்களிலேயே பாதுகாப்பாக தங்கியிருப்பதே பொருத்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பயணத்தில் ஈடுபட்டு இடைவழியே நிற்பவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளை ரயில், போக்குவரத்து திணைக்களங்கள் துரிதப்படுத்த வேண்டும். மக்களே தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வெளி நடமாட்டங்களை தவிர்க்கவும். பாதுகாப்பான சூழலில் இருக்கும் இயலுமானவர்கள் அண்மித்த இடங்களில் தேவைப்படும் மீட்புப்பணிகளில் கைகொடுக்கவும். மிக முக்கியமாக, விசை கூடிய மோட்டார்சைக்கிள்களில் முறுக்கியபடி மழையில் விடுப்பு பார்க்கவும் ரீல்ஸ் எடுக்கவும் புறப்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.