• Nov 28 2025

நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டதாக விசாரணையில் தகவல் !

shanuja / Nov 28th 2025, 10:39 am
image

மஹரகம நகரிலுள்ள கடையொன்றிற்கு அருகில்  பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு  நேற்று வியாழக்கிழமை காலை (27)  கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டது. 


குறித்த சடலம் நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்தவர் கும்புகவத்தை - கோனபல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


உடற்கூற்றுப் பரிசோதனைகள் களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரிசோதனைகளின்போது தெரிய வந்துள்ளது.


சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டதாக விசாரணையில் தகவல் மஹரகம நகரிலுள்ள கடையொன்றிற்கு அருகில்  பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு  நேற்று வியாழக்கிழமை காலை (27)  கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டது. குறித்த சடலம் நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் கும்புகவத்தை - கோனபல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.உடற்கூற்றுப் பரிசோதனைகள் களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரிசோதனைகளின்போது தெரிய வந்துள்ளது.சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement