யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது. முன்னர் மணல் திட்டியாக இருக்கும் பகுதிகளில் இருந்து மணல் எடுத்து செல்லப்பட்டது.
தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் அமைப்பதனால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு கள்ள மண் அகழ்வு தொடர்ந்தால் இக் கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு; மக்கள் அச்சம் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது. முன்னர் மணல் திட்டியாக இருக்கும் பகுதிகளில் இருந்து மணல் எடுத்து செல்லப்பட்டது. தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் அமைப்பதனால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.இவ்வாறு கள்ள மண் அகழ்வு தொடர்ந்தால் இக் கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.