• Jul 10 2025

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

shanuja / Jul 9th 2025, 10:29 pm
image


நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம்  சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை நினைவு கூரப்பட்டது. 


நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு,  உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி  உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். 


கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்களில்  தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 135 ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம்  சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை நினைவு கூரப்பட்டது. நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு,  உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி  உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்களில்  தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 135 ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement