கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் "கொழும்பு மாநகர சபைக் கூட்டத்தில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் கலாசார முறைப்படி மேளதாளங்களோடு நவராத்திரி விழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாநகர சபை முதல்வர் வ்ராய்க் கெலி பல்தசார் தலைமையில் நவராத்திரி விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகளிலும் கலந்து சிறப்பித்த மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை தமிழ் ஊழியர்களும் இந்த பூஜை நிகழ்வில் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொழும்பைச் சேர்ந்த தமிழ் பாடசாலைகள் மற்றும் இந்து மன்றங்களின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு அதில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு மாநகர சபை முதல்வர் பரிசில்கள் வழங்கியதோடு நவராத்திரியின் மகிமையையும் அதன் மூலம் ஏற்படும் இன சமத்துவத்தையும் பற்றி தனது உரையில் கருத்து தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா நிகழ்வுகள்; தமிழ் கலாசார முறைப்படி மேளதாளங்களுடன் முன்னெடுப்பு கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் "கொழும்பு மாநகர சபைக் கூட்டத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் கலாசார முறைப்படி மேளதாளங்களோடு நவராத்திரி விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மாநகர சபை முதல்வர் வ்ராய்க் கெலி பல்தசார் தலைமையில் நவராத்திரி விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகளிலும் கலந்து சிறப்பித்த மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை தமிழ் ஊழியர்களும் இந்த பூஜை நிகழ்வில் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து கொழும்பைச் சேர்ந்த தமிழ் பாடசாலைகள் மற்றும் இந்து மன்றங்களின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு அதில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு மாநகர சபை முதல்வர் பரிசில்கள் வழங்கியதோடு நவராத்திரியின் மகிமையையும் அதன் மூலம் ஏற்படும் இன சமத்துவத்தையும் பற்றி தனது உரையில் கருத்து தெரிவித்தார்.