• Sep 30 2025

தொழில்நுட்பக் கோளாறால் பாறையில் மோதிய பேருந்து ; 12 பேர் காயம்- நுவரெலியாவில் விபத்து!

shanuja / Sep 29th 2025, 11:09 pm
image

பேருந்து ஒன்று  பாறையில் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விபத்துச் சம்பவம் நுவரெலியா - ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு சம்பவித்துள்ளது. 

ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே  இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பேருந்து வீதியில் உள்ள பாறையில் மோதியதில் அதில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில்  சிகிச்சைகளுக்காக கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறால் பாறையில் மோதிய பேருந்து ; 12 பேர் காயம்- நுவரெலியாவில் விபத்து பேருந்து ஒன்று  பாறையில் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் நுவரெலியா - ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு சம்பவித்துள்ளது. ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே  இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து வீதியில் உள்ள பாறையில் மோதியதில் அதில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில்  சிகிச்சைகளுக்காக கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement