• Nov 04 2024

யாழிலுள்ள ஆலயம் ஒன்றில் கைகலப்பு - குருக்கள் மூவர் கைது...!

Anaath / Jun 23rd 2024, 1:32 pm
image

Advertisement

யாழ்ப்பாணதில் உள்ள பிரபல கோவில் ஒன்றில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவர்கள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.

அதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இதே வேளை குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டு வருகிறது.இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி, கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ள நிலையிலேயே குறித்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

யாழிலுள்ள ஆலயம் ஒன்றில் கைகலப்பு - குருக்கள் மூவர் கைது. யாழ்ப்பாணதில் உள்ள பிரபல கோவில் ஒன்றில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவர்கள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.அதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.இதே வேளை குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டு வருகிறது.இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி, கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ள நிலையிலேயே குறித்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement