• Aug 26 2025

நீதிமன்றத்துக்கு அருகில் ஒன்றுகூடிய ரணில் ஆதரவாளர்களால் பதற்றம்; வீதித் தடைகளை போட்ட பொலிஸார்

Chithra / Aug 26th 2025, 12:55 pm
image

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.

இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று  பிற்பகல் 01.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் நிறைந்துள்ளனர்.

எனவே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சில அணுகல் சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சாலைத் தடைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின்  தலைமை அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன. 

பொலிஸாருக்கு மேலதிகமாக, சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நீதிமன்றத்துக்கு அருகில் ஒன்றுகூடிய ரணில் ஆதரவாளர்களால் பதற்றம்; வீதித் தடைகளை போட்ட பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று  பிற்பகல் 01.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இதனால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் நிறைந்துள்ளனர்.எனவே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சில அணுகல் சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சாலைத் தடைகளும் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின்  தலைமை அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக, சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement