• Jan 16 2026

வர்த்தகரை கொலை செய்ய திட்டம்: துப்பாக்கியுடன் நால்வர் கைது!

dileesiya / Jan 10th 2026, 5:10 pm
image

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 


குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பிரதானமாக கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவர்களிடமிருந்து ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


அத்துடன், இவர்களுக்கு  உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வர்த்தகரை கொலை செய்ய திட்டம்: துப்பாக்கியுடன் நால்வர் கைது வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பிரதானமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இவர்களுக்கு  உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement