• Aug 11 2025

கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை இன்று ஆரம்பம்!

Bus
shanuja / Aug 11th 2025, 11:10 am
image

 

கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

 

வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி முதல் சொய்சாபுர வரை செல்லும் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. 

 

பின்னர் வட கொழும்பு நகர சபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பேருந்துகள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன. 

 

எனினும், குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேருந்து சேவையை, முழுமையாக இயக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை இன்று ஆரம்பம்  கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.  வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி முதல் சொய்சாபுர வரை செல்லும் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.  பின்னர் வட கொழும்பு நகர சபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பேருந்துகள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன.  எனினும், குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேருந்து சேவையை, முழுமையாக இயக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement