ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லூலா ட சில்வா பதிலளித்துள்ளதுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட லூலா ட சில்வாவுக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னதாக தனது X தளத்தின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் மக்கள் தமது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி அநுர தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பிரேசில் மக்களின் இந்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றும் அவர் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துகளுக்குப் பதிலளித்துள்ள பிரேசில் ஜனாதிபதி, இலங்கையுடனான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரேசில் ஜனாதிபதி இலங்கை தொடர்பில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லூலா ட சில்வா பதிலளித்துள்ளதுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.அத்துடன், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட லூலா ட சில்வாவுக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னதாக தனது X தளத்தின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் மக்கள் தமது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி அநுர தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.மேலும், பிரேசில் மக்களின் இந்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றும் அவர் பாராட்டியிருந்தார்.இந்த நிலையிலேயே, ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துகளுக்குப் பதிலளித்துள்ள பிரேசில் ஜனாதிபதி, இலங்கையுடனான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.