• May 16 2025

திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

Thansita / May 5th 2025, 6:30 pm
image

திருகோணமலை மாவட்டத்தில்  321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை  இன்று திருகோணமலையில் அமைந்துள்ள விபுலானந்தா  கல்லூரியில் ஆரம்பமானது.

நாளைய தினம் (06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்,  வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன.

321 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டன.

தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்  எஸ். கே. டி. நெரஞ்சன்ஆகியோரின்  நேரடி கண்காணிப்பின் கீழ்

,

வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.


திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு திருகோணமலை மாவட்டத்தில்  321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை  இன்று திருகோணமலையில் அமைந்துள்ள விபுலானந்தா  கல்லூரியில் ஆரம்பமானது.நாளைய தினம் (06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்,  வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன.321 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டன.தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்  எஸ். கே. டி. நெரஞ்சன்ஆகியோரின்  நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now