• May 10 2025

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக பொறுப்பதிகாரி உயிரிழப்பு

Chithra / May 9th 2025, 10:41 pm
image

 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த  52 வயதுடைய W., A. D. N.மகாகுமார என்ற பொறுப்பதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக வெலிசறை மார்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பொலிஸ் துணை ஆய்வாளராக சேவையில் இணைந்து நாட்டடின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.

இவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக பொறுப்பதிகாரி உயிரிழப்பு  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.களுத்துறை பகுதியைச் சேர்ந்த  52 வயதுடைய W., A. D. N.மகாகுமார என்ற பொறுப்பதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உடல்நலக் குறைவு காரணமாக வெலிசறை மார்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பொலிஸ் துணை ஆய்வாளராக சேவையில் இணைந்து நாட்டடின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.இவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement