கல்வி அமைச்சு நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசனைக் குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக பௌத்த ஆலோசனைக் குழுவிற்கு ஏற்கனவே நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய கத்தோலிக்க ஆலோசனைக் குழுவிற்கான நியமனக் கடிதங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கத்தோலிக்க ஆலோசனைக் குழுவிற்கான நியமனங்கள் மூன்று வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதுடன் மேலும் கல்விக்குப் பொறுப்பான கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மேற்றிராணியார்; மற்றும் சிலாபம் மேற்றிராணியார் உட்பட ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இருபது (20) பாதிரியார்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
கத்தோலிக்க ஆலோசனைக் குழு கத்தோலிக்க கல்வி தொடர்பாக கல்வி அமைச்சிற்கு மட்டுமல்ல கல்வி அமைச்சருக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன் அமைச்சில் இடம்பெறும் கத்தோலிக்க செயற்பாடுகளுக்கும் ஆலோசனைக்குழு அதன் ஒத்துழைப்பை வழங்கும்.
கல்வி அமைச்சின் கத்தோலிக்க ஆலோசனைக் குழு நியமனம் கல்வி அமைச்சு நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசனைக் குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக பௌத்த ஆலோசனைக் குழுவிற்கு ஏற்கனவே நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய கத்தோலிக்க ஆலோசனைக் குழுவிற்கான நியமனக் கடிதங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் வழங்கி வைக்கப்பட்டது.கத்தோலிக்க ஆலோசனைக் குழுவிற்கான நியமனங்கள் மூன்று வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதுடன் மேலும் கல்விக்குப் பொறுப்பான கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மேற்றிராணியார்; மற்றும் சிலாபம் மேற்றிராணியார் உட்பட ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இருபது (20) பாதிரியார்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.கத்தோலிக்க ஆலோசனைக் குழு கத்தோலிக்க கல்வி தொடர்பாக கல்வி அமைச்சிற்கு மட்டுமல்ல கல்வி அமைச்சருக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன் அமைச்சில் இடம்பெறும் கத்தோலிக்க செயற்பாடுகளுக்கும் ஆலோசனைக்குழு அதன் ஒத்துழைப்பை வழங்கும்.