அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையைநிராகரித்தார்.
மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.
சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை - சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையைநிராகரித்தார். மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார். சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.