• Jul 16 2025

35 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் சிக்கிய நபர்

Chithra / Jul 16th 2025, 11:09 am
image

 

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவித்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

35 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் சிக்கிய நபர்  சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவித்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement