• May 08 2025

வியட்நாமில் இருந்து அதிசொகுசுஜெட் விமானத்தில் வந்திறங்கிய அநுர; நெட்டிசன்கள் கேள்வியால் எழுந்தது சர்ச்சை

Chithra / May 7th 2025, 9:18 am
image

 

வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்  (Luong Cuong) இன்அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த அரச விஜயத்தை  மேற்கொண்ட அவர்ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்   சிறப்புரையாற்றினார்.

இந்நிலையில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.

அதிசொகுசு ஜெட் விமானமான Embraer Legacy 600 மூலம் ஜனாதிபதி பயணித்தது என்ன அடிப்படையில் அதற்கு செலவளித்தது யார் என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்திருந்தனர்.

எவ்வாறாயினும் தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனாதிபதி அவரின் நிதியை பெற்றோ அல்லது அரச பணத்தை செலவிட்டோ இந்த விமானத்தை பயன்படுத்தவில்லை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிப்பிட்டுள்ளன.


வியட்நாமில் இருந்து அதிசொகுசுஜெட் விமானத்தில் வந்திறங்கிய அநுர; நெட்டிசன்கள் கேள்வியால் எழுந்தது சர்ச்சை  வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்  (Luong Cuong) இன்அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த அரச விஜயத்தை  மேற்கொண்ட அவர்ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்   சிறப்புரையாற்றினார்.இந்நிலையில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.அதிசொகுசு ஜெட் விமானமான Embraer Legacy 600 மூலம் ஜனாதிபதி பயணித்தது என்ன அடிப்படையில் அதற்கு செலவளித்தது யார் என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்திருந்தனர்.எவ்வாறாயினும் தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அவரின் நிதியை பெற்றோ அல்லது அரச பணத்தை செலவிட்டோ இந்த விமானத்தை பயன்படுத்தவில்லை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிப்பிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement