தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்த இந்தியா மீதான பகையுணர்வு இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் கட்சிகளுக்கிடையில் மே தினத்துக்காக மக்களை ஒன்று கூட்ட போட்டியிட்டுக் கொள்ளும் கலாசாரம் எம்மால் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியானது எமது செய்தியை கிராம மட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வையும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டிக்கிறது.
நமது பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்தது இந்திய அரசுதான்.
ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது இந்திய அரசாங்கத்தின் மீது தேவையற்ற தாக்குதல் நடத்தப்படுவது இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்த இந்தியா மீதான பகையுணர்வு இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அரசியல் கட்சிகளுக்கிடையில் மே தினத்துக்காக மக்களை ஒன்று கூட்ட போட்டியிட்டுக் கொள்ளும் கலாசாரம் எம்மால் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியானது எமது செய்தியை கிராம மட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வையும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டிக்கிறது. நமது பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்தது இந்திய அரசுதான். ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது இந்திய அரசாங்கத்தின் மீது தேவையற்ற தாக்குதல் நடத்தப்படுவது இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என்றுள்ளது.