• May 01 2025

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மேதின பேரணி தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Apr 29th 2025, 2:16 pm
image

அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

யாழ் ஊடக அமையத்தில்  இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து  உழைப்பாளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது 

ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகரிப்பு , கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மேதின பேரணியானது எதிர்வரும் 1 ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த மேதினப் பேரணியானது, யாழ் நகரின் பிரதான சாலைகளூடக பேரணியாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக  ஒன்று கூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த பேரணியில் அனைத்து துறைசார் தரப்பினரும் ஆதரவை வழங்கி குறித்த பேரணியை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மேதின பேரணி தொடர்பில் அறிவிப்பு. அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுயாழ் ஊடக அமையத்தில்  இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து  உழைப்பாளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகரிப்பு , கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மேதின பேரணியானது எதிர்வரும் 1 ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த மேதினப் பேரணியானது, யாழ் நகரின் பிரதான சாலைகளூடக பேரணியாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக  ஒன்று கூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.குறித்த பேரணியில் அனைத்து துறைசார் தரப்பினரும் ஆதரவை வழங்கி குறித்த பேரணியை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement