• Apr 27 2026

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Chithra / Feb 27th 2026, 8:28 am
image


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 


அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்.

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement