அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (4) அதிகாலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது; கைத்துப்பாக்கி மீட்பு அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (4) அதிகாலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இதேவேளை, பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.