• Sep 30 2026

இலங்கை 'அறிவுப் பாலைவனமாக' மாறும் அபாயம்! – நடக்கப்போவது என்ன? வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை

Chithra / Sep 30th 2026, 11:00 am
image


வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது.


மொத்த அரச வரி வருவாயில் பாதகமான தாக்கம் ஏற்படாத வகையில், நிபுணர்களுக்கான நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்காக ஜனாதிபதியிடம் பல தொழில்நுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.


நாட்டின் மிகவும் கடினமான காலகட்டங்களில் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு வரிக் கொள்கையில் விரைவான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.


தமது சம்பளத்தில் சுமார் 36 சதவீதத்தை நேர்முக வரியாக செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக மறைமுக வரிகளையும் செலுத்த வேண்டியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், கடந்த ஆண்டு அரசாங்கம் 5,400 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வரி வருவாய் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


மேலும், 2025ஆம் ஆண்டில் PAYE வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், நாட்டின் பெறுமதிமிக்க மனித வளத்தையும் அறிவையும் நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள நிலையான மற்றும் மூலோபாய ரீதியான திட்டம் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழில்முறை மனித வளத்தை நாடு இழந்து, இலங்கை “அறிவுப் பாலைவனமாக” மாறும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை 'அறிவுப் பாலைவனமாக' மாறும் அபாயம் – நடக்கப்போவது என்ன வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது.மொத்த அரச வரி வருவாயில் பாதகமான தாக்கம் ஏற்படாத வகையில், நிபுணர்களுக்கான நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்காக ஜனாதிபதியிடம் பல தொழில்நுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டின் மிகவும் கடினமான காலகட்டங்களில் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு வரிக் கொள்கையில் விரைவான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.தமது சம்பளத்தில் சுமார் 36 சதவீதத்தை நேர்முக வரியாக செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக மறைமுக வரிகளையும் செலுத்த வேண்டியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், கடந்த ஆண்டு அரசாங்கம் 5,400 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வரி வருவாய் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.மேலும், 2025ஆம் ஆண்டில் PAYE வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நாட்டின் பெறுமதிமிக்க மனித வளத்தையும் அறிவையும் நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள நிலையான மற்றும் மூலோபாய ரீதியான திட்டம் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழில்முறை மனித வளத்தை நாடு இழந்து, இலங்கை “அறிவுப் பாலைவனமாக” மாறும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement