• Sep 30 2026

ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கலாகக் கூறவே கூடாது!- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. தெரிவிப்பு

Aathira / Sep 30th 2026, 7:29 am
image

ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பாரதூரமான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தற்போதைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு அரசாட்சியின் அனைத்துச் செயற்பாடுகளையும் தவறு என்று விமர்சிக்கக் கூடாது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குக் கடந்த அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டது. ஆகவே, ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கும் உண்டு. அரசியல் பிரபல்யத்துக்காக அந்த நிபந்தனைகளில் இருந்து எவராலும் விடுபட முடியாது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பஸில் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப் பல ஊழல் வழக்குகள் காணப்படுகின்றன. இவர்கள் தமக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளைச் சட்டத்தின் முன் எதிர்கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை நாட்டு மக்களுக்குச் சேர்ப்பித்தல் என்பவற்றிலும் அரசு தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும்.  - என்றார்.

ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கலாகக் கூறவே கூடாது- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. தெரிவிப்பு ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பாரதூரமான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தற்போதைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு அரசாட்சியின் அனைத்துச் செயற்பாடுகளையும் தவறு என்று விமர்சிக்கக் கூடாது.பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குக் கடந்த அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டது. ஆகவே, ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கும் உண்டு. அரசியல் பிரபல்யத்துக்காக அந்த நிபந்தனைகளில் இருந்து எவராலும் விடுபட முடியாது.முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதேபோல், பஸில் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப் பல ஊழல் வழக்குகள் காணப்படுகின்றன. இவர்கள் தமக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளைச் சட்டத்தின் முன் எதிர்கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை நாட்டு மக்களுக்குச் சேர்ப்பித்தல் என்பவற்றிலும் அரசு தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும்.  - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement