• Oct 05 2026

மண்சரிவில் சிக்கிய ரயில்! – அதிகாலையில் உலுக்கிய விபத்து - முடங்கிய சேவைகள்

Chithra / Oct 5th 2026, 10:41 am
image


பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை தடம்புரண்டுள்ளது.


இந்தச் சம்பவம் அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்ததுடன், பாறைகள் மற்றும் கற்களும் காணப்பட்டமையினால் ரயில் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயில் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக, பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


மண் சரிவு இருப்பதை அவதானித்தபோது ரயில் அதனை நெருங்கியிருந்ததாகவும், சுமார் 10 மீற்றர் தூரமே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மண் திட்டில் ரயில் மோதியவுடன் தூக்கி வீசப்பட்டதாகவும், அதன் வேகத்திலேயே பாறையொன்றில் மோதி ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.


மண்சரிவில் சிக்கிய ரயில் – அதிகாலையில் உலுக்கிய விபத்து - முடங்கிய சேவைகள் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை தடம்புரண்டுள்ளது.இந்தச் சம்பவம் அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்ததுடன், பாறைகள் மற்றும் கற்களும் காணப்பட்டமையினால் ரயில் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயில் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக, பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.மண் சரிவு இருப்பதை அவதானித்தபோது ரயில் அதனை நெருங்கியிருந்ததாகவும், சுமார் 10 மீற்றர் தூரமே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மண் திட்டில் ரயில் மோதியவுடன் தூக்கி வீசப்பட்டதாகவும், அதன் வேகத்திலேயே பாறையொன்றில் மோதி ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement