• Sep 29 2026

லலித்–குகன் வழக்கு: கோட்டாபய வருகையால் கொழும்பில் பரபரப்பு! வெளியே திரண்ட மக்கள்!

Chithra / Sep 29th 2026, 3:04 pm
image


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) செவ்வாய்க்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அங்கு  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்தார். 


இந்நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்”, “அரசியல் படுகொலைகளுக்கு நீதி வழங்க வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.


லலித் மற்றும் குகன் உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.


இருவரும் காணாமல் போன காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.


இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷவை முதன்முதலில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அழைத்திருந்தது.


எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, மின்னணு ஒலி–ஒளி வழிமுறைகள் ஊடாக சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதையடுத்து, தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.


இந்நிலையில், செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லலித்–குகன் வழக்கு: கோட்டாபய வருகையால் கொழும்பில் பரபரப்பு வெளியே திரண்ட மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) செவ்வாய்க்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அங்கு  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்”, “அரசியல் படுகொலைகளுக்கு நீதி வழங்க வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.லலித் மற்றும் குகன் உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.இருவரும் காணாமல் போன காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷவை முதன்முதலில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அழைத்திருந்தது.எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, மின்னணு ஒலி–ஒளி வழிமுறைகள் ஊடாக சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.இந்நிலையில், செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement