• Sep 30 2026

மனைவி, மகள்களுடன் வீடு திரும்பிய தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி! பாணந்துறையில் பரபரப்பு

Chithra / Sep 30th 2026, 10:25 am
image


பாணந்துறை - வலானா பகுதியில் நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நேற்று (29) இரவு சுமார் 10 மணியளவில், குறித்த தொழிலதிபர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். 


மஹனாம வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த காரை மற்றொரு வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் பின்தொடர்ந்து தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தொழிலதிபர் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில், கார் சாலையோரக் கால்வாயில் பாய்ந்து விழுந்துள்ளது.


அதன் பின்னர், குறித்த குழுவினர் காரின் கண்ணாடிகளை உடைத்து தொழிலதிபரை வெளியே இழுத்து தாக்கியதுடன், 

தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவத்தில் அவரது இரு மகள்களும் காயமின்றி தப்பிய நிலையில், மனைவி காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார். 

 

பணத்தகராறு காரணமாகவே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இதற்கிடையில், இந்தக் கடத்தலின் பின்னணியில் தொழிலதிபரின் உறவினர் ஒருவர் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை தெற்குப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவத்தில் தொழிலதிபரின் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

மனைவி, மகள்களுடன் வீடு திரும்பிய தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி பாணந்துறையில் பரபரப்பு பாணந்துறை - வலானா பகுதியில் நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (29) இரவு சுமார் 10 மணியளவில், குறித்த தொழிலதிபர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். மஹனாம வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த காரை மற்றொரு வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் பின்தொடர்ந்து தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தொழிலதிபர் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில், கார் சாலையோரக் கால்வாயில் பாய்ந்து விழுந்துள்ளது.அதன் பின்னர், குறித்த குழுவினர் காரின் கண்ணாடிகளை உடைத்து தொழிலதிபரை வெளியே இழுத்து தாக்கியதுடன், தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் அவரது இரு மகள்களும் காயமின்றி தப்பிய நிலையில், மனைவி காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார்.  பணத்தகராறு காரணமாகவே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்தக் கடத்தலின் பின்னணியில் தொழிலதிபரின் உறவினர் ஒருவர் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை தெற்குப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவத்தில் தொழிலதிபரின் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement