• Jul 23 2025

புங்குடுதீவு கள்ளியாறு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து; விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டம்!

Thansita / Jul 21st 2025, 9:07 pm
image

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள  கள்ளியாறு திட்டத்திற்கான  MOU ( Memorandum Of Understanding )

ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

வடமாகாண பிரதம செயலாளருக்கும்   கள்ளியாறு திட்டத்திற்கான குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு குழுமத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட நிகழ்வாக  நாளை இதற்கான கோரம் (tender) பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு அடுத்த இரண்டு கிழமைகளுக்குள் ஒரு கட்டிடக்கலை குழுமத்திடம் வழங்கப்படவுள்ளது. 

இலங்கை நீர்ப்பாசண திணைக்களத்தின் மேற்பார்வையோடு இந்த திட்டம் விரைவில்  ஆரம்பமாகவுள்ளதாக புங்குடுதீவு பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 

ஊர் மக்கள் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களின்  பெரும் நிதிப்பங்களிப்போடு இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளதால், இத்திட்டம் தடையின்றி நிறைவடைந மேலும் அனைவரின்  பங்களிப்புகளையும் எதிர்பார்ப்பதாக மேலும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்த திட்டம் ஊருக்குள் வரும் உவர்நீரை கட்டுப்படுத்தி மழைநீரை சேகரித்து விவசாயம், கால்நடை, பொருளாதார எழுச்சி, தடையற்ற தரமான நீர் வழங்கலை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்படும்  ஒரு பெருந்திட்டம் ஆகும் 

இந்த திட்டமானது மூன்று பிரிவுகளாக திட்டமிடப்பட்டு, அதன் முதற்பிரிவிற்கான நிதி உதவியினை  கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் வழங்கியுள்ளனர். 

சுமார் 25 மில்லியன் ரூபாய் தேவைப்படும் இடத்தில் 14 மில்லியன் ரூபா நிதி சங்கத்தால்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மிகுதிப் பணத்தையும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் சேகரித்துவருகின்றனர்


புங்குடுதீவு கள்ளியாறு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து; விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டம் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள  கள்ளியாறு திட்டத்திற்கான  MOU ( Memorandum Of Understanding )ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளருக்கும்   கள்ளியாறு திட்டத்திற்கான குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு குழுமத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதன் அடுத்த கட்ட நிகழ்வாக  நாளை இதற்கான கோரம் (tender) பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு அடுத்த இரண்டு கிழமைகளுக்குள் ஒரு கட்டிடக்கலை குழுமத்திடம் வழங்கப்படவுள்ளது. இலங்கை நீர்ப்பாசண திணைக்களத்தின் மேற்பார்வையோடு இந்த திட்டம் விரைவில்  ஆரம்பமாகவுள்ளதாக புங்குடுதீவு பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். ஊர் மக்கள் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களின்  பெரும் நிதிப்பங்களிப்போடு இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளதால், இத்திட்டம் தடையின்றி நிறைவடைந மேலும் அனைவரின்  பங்களிப்புகளையும் எதிர்பார்ப்பதாக மேலும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்இந்த திட்டம் ஊருக்குள் வரும் உவர்நீரை கட்டுப்படுத்தி மழைநீரை சேகரித்து விவசாயம், கால்நடை, பொருளாதார எழுச்சி, தடையற்ற தரமான நீர் வழங்கலை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்படும்  ஒரு பெருந்திட்டம் ஆகும் இந்த திட்டமானது மூன்று பிரிவுகளாக திட்டமிடப்பட்டு, அதன் முதற்பிரிவிற்கான நிதி உதவியினை  கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் வழங்கியுள்ளனர். சுமார் 25 மில்லியன் ரூபாய் தேவைப்படும் இடத்தில் 14 மில்லியன் ரூபா நிதி சங்கத்தால்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மிகுதிப் பணத்தையும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் சேகரித்துவருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement