கொழும்பில் அமைந்துள்ள சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ( City of Dreams) நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான், முதலில் திட்டமிட்டபடி, விருந்தக திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த ஷாருக் கான், தனது வருகை சாத்தியமாகாத நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து, இலங்கை மக்களுக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர் பங்கேற்கவில்லை என்றாலும், நிகழ்வு முன்னமைக்கப்பட்டபடியே நடைபெறும் என உள்ளூர் மற்றும் உலகளாவிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு விழாவாகவே தொடரும் என ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
எதிர்காலத்தில் ஷாருக்கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விஜயத்தை திடீரென இரத்துசெய்த நடிகர் ஷாருக்கான்; வெளியான அறிவிப்பு கொழும்பில் அமைந்துள்ள சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ( City of Dreams) நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான், முதலில் திட்டமிட்டபடி, விருந்தக திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த ஷாருக் கான், தனது வருகை சாத்தியமாகாத நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து, இலங்கை மக்களுக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.அவர் பங்கேற்கவில்லை என்றாலும், நிகழ்வு முன்னமைக்கப்பட்டபடியே நடைபெறும் என உள்ளூர் மற்றும் உலகளாவிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு விழாவாகவே தொடரும் என ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.எதிர்காலத்தில் ஷாருக்கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.