• Sep 09 2025

கிளிநொச்சியில் சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு!

shanuja / Sep 6th 2025, 7:00 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அமைப்பின் (964KOLO)  2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும்  கிளிநொச்சியில்  இடம்பெற்றது.


கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நேற்று முன்தினம் (6) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 


 தமிழ் பாரம்பரிய கலைவாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அமைப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


இன் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு கல்வி உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், விழிப்புணர்வற்றவர்களுக்கான டிஜிட்டல் முறையிலான வெள்ளை பிரம்புகளை கண்டுபிடித்த மாணவன் உள்ளிட்ட  சாதனையாளர்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கௌரவித்தார். 


நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கௌரவ விருந்தினர்களாக   கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஜி.கஜபதி, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா, கிளநொச்சி  மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆர். மோகனதாஸ் மற்றும் கிளிநொச்சி கிராம அலுவலர் ம.ஜெயந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அமைப்பின் (964KOLO)  2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும்  கிளிநொச்சியில்  இடம்பெற்றது.கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நேற்று முன்தினம் (6) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  தமிழ் பாரம்பரிய கலைவாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அமைப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.இன் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு கல்வி உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், விழிப்புணர்வற்றவர்களுக்கான டிஜிட்டல் முறையிலான வெள்ளை பிரம்புகளை கண்டுபிடித்த மாணவன் உள்ளிட்ட  சாதனையாளர்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கௌரவித்தார். நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கௌரவ விருந்தினர்களாக   கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஜி.கஜபதி, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா, கிளநொச்சி  மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆர். மோகனதாஸ் மற்றும் கிளிநொச்சி கிராம அலுவலர் ம.ஜெயந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement