• Aug 04 2025

திடீர் சுகயீனத்தால் இளைஞன் பரிதாப மரணம்; யாழில் பெரும் சோகம்

Chithra / Aug 3rd 2025, 7:35 am
image


யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய  சுந்தரலிங்கம் தேனுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இந்நிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

திடீர் சுகயீனத்தால் இளைஞன் பரிதாப மரணம்; யாழில் பெரும் சோகம் யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய  சுந்தரலிங்கம் தேனுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement