• Sep 16 2025

குமுழமுனை கிராமத்திற்குள் புகுந்து மாணவர்களை துரத்திய காட்டு யானை; வீடுகளுக்குள்ளும் நுழைந்து அட்டகாசம்

Chithra / Sep 15th 2025, 4:10 pm
image

முல்லைத்தீவு -  குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள்  இன்று காலை புகுந்த காட்டு யானையினால்  அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமையில் மாணவர்களை இன்று  காலை துரத்தியுள்ளது. 

பாடசாலைக்கு மாணவர்கள்  வராமையினால் பாடசாலை  நிர்வாகத்தினரால்  வலயகல்வி பணிமனைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வலயகல்வி பணிமனையினர், சம்பவத்தை அறிந்து பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும் பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. 

ஊர்மக்கள்  இணைந்து  யானையை விரட்ட முடியாதமையினால் வன ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு  தகவல் வழங்கியதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டிவிட்டுள்ளனர்.

குறித்த யானை குறித்த கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக நின்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.


குமுழமுனை கிராமத்திற்குள் புகுந்து மாணவர்களை துரத்திய காட்டு யானை; வீடுகளுக்குள்ளும் நுழைந்து அட்டகாசம் முல்லைத்தீவு -  குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள்  இன்று காலை புகுந்த காட்டு யானையினால்  அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமையில் மாணவர்களை இன்று  காலை துரத்தியுள்ளது. பாடசாலைக்கு மாணவர்கள்  வராமையினால் பாடசாலை  நிர்வாகத்தினரால்  வலயகல்வி பணிமனைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வலயகல்வி பணிமனையினர், சம்பவத்தை அறிந்து பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும் பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. ஊர்மக்கள்  இணைந்து  யானையை விரட்ட முடியாதமையினால் வன ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு  தகவல் வழங்கியதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டிவிட்டுள்ளனர்.குறித்த யானை குறித்த கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக நின்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement