• Sep 15 2025

தேசிய சிறை கைதிகள் தினத்துக்கு எமது விடுதலை இடம்பெறும் என நினைத்தோம்; ஆனால் அது நிறைவேறவில்லை! அரசியல் கைதிகள் கவலை

Chithra / Sep 15th 2025, 8:51 am
image

தேசிய சிறை கைதிகள் தினம் 12ஆம் திகதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு குடும்ப சந்திப்புகள் இடம்பெறுகின்றமை வழமை.

அந்தவகையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் தாயார், 28 வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதியான இராமச்சந்திரனின் குடும்பத்தினர், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோர் குறித்த சிறை கைதிகளை நேற்றையதினம்  பார்வையிட்டனர்.

இதன்போது இராமச்சந்திரனின் பேரப்பிள்ளைகளைகளான சிறுவர்களும் சிறைக்குள் சென்று அவரை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான விடுதலை நீரை ஆனந்தசுதாகரன் வழங்கி வைத்தார்.

மேலும், இந்த ஆண்டு அரசியல் கைதிகள் தினத்துக்கு தமது விடுதலை கைகூடும் என நினைத்தபோதும் அது நிறைவேறவில்லை என்றும், இந்த அரசாங்கம் தங்களை நிச்சயம் விடுதலை செய்யும் என தாங்கள் நம்புவதாக அவர்கள் தம்மை பார்க்க சென்றவர்களிடம் தெரிவித்துள்ளனர். 


தேசிய சிறை கைதிகள் தினத்துக்கு எமது விடுதலை இடம்பெறும் என நினைத்தோம்; ஆனால் அது நிறைவேறவில்லை அரசியல் கைதிகள் கவலை தேசிய சிறை கைதிகள் தினம் 12ஆம் திகதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு குடும்ப சந்திப்புகள் இடம்பெறுகின்றமை வழமை.அந்தவகையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் தாயார், 28 வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதியான இராமச்சந்திரனின் குடும்பத்தினர், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோர் குறித்த சிறை கைதிகளை நேற்றையதினம்  பார்வையிட்டனர்.இதன்போது இராமச்சந்திரனின் பேரப்பிள்ளைகளைகளான சிறுவர்களும் சிறைக்குள் சென்று அவரை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான விடுதலை நீரை ஆனந்தசுதாகரன் வழங்கி வைத்தார்.மேலும், இந்த ஆண்டு அரசியல் கைதிகள் தினத்துக்கு தமது விடுதலை கைகூடும் என நினைத்தபோதும் அது நிறைவேறவில்லை என்றும், இந்த அரசாங்கம் தங்களை நிச்சயம் விடுதலை செய்யும் என தாங்கள் நம்புவதாக அவர்கள் தம்மை பார்க்க சென்றவர்களிடம் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement