• Sep 15 2025

உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் பலி

Chithra / Sep 15th 2025, 9:11 am
image


கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

பின்னர் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பப் பரிசோதனைகளில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கண்டறியப்பட்டது.

உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் பலி கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பின்னர் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பப் பரிசோதனைகளில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement