• Jul 18 2025

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய பல்கலை மாணவன் கைது!

Chithra / Jul 18th 2025, 11:53 am
image


இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும், வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய பல்கலை மாணவன் கைது இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும், வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement