• May 26 2025

திருமலையில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து; இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

Chithra / May 25th 2025, 12:36 pm
image


 

திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய மினிவேனும், நகரை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


திருமலையில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து; இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்  திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய மினிவேனும், நகரை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement