இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் பன்னூல் ஆசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய "ஒரு குடம் கண்ணீர்" நூல் வாசிப்பனுவ நிகழ்வு கொழும்பு - 12, பாத்திமா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்குத் DXN Lanka டாக்டர் முனீர் அபூபக்கர் தலைமை தாங்கினார் . இளைஞர் பயிற்றுவிப்பாளர் ஹூஸ்னி ஜாபிர், இலங்கை திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான திருமதி தேவகௌரி மகாலிங்கசிவம் ஆகியோர் நூல் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அக்பர் பிரதர்ஸ் சந்தைப்படுத்தல் முகாமையாளர் இன்ஷாப்டீன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொலன்னாவைப்பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் பெரோஸ் முகம்மத் உரை நிகழ்த்தினார்.
அவருக்கு நூலாசிரியர் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவம் வழங்கப்பட்டது. இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் மற்றும் 4S அமைப்பினர் நூலாசிரியருக்குப் பொன்னைடைபோர்த்திக் கௌரவம் வழங்கினார்.
வரவேற்புரையை ஆஷிகா பர்ஷான் வழங்கியதோடு நிகழ்வுகளை ஷிமாரா அலி தொகுத்து வழங்கினார்.
"ஒரு குடம் கண்ணீர்" நூல் வாசிப்பனுவ நிகழ்வு இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் பன்னூல் ஆசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய "ஒரு குடம் கண்ணீர்" நூல் வாசிப்பனுவ நிகழ்வு கொழும்பு - 12, பாத்திமா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வுக்குத் DXN Lanka டாக்டர் முனீர் அபூபக்கர் தலைமை தாங்கினார் . இளைஞர் பயிற்றுவிப்பாளர் ஹூஸ்னி ஜாபிர், இலங்கை திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான திருமதி தேவகௌரி மகாலிங்கசிவம் ஆகியோர் நூல் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அக்பர் பிரதர்ஸ் சந்தைப்படுத்தல் முகாமையாளர் இன்ஷாப்டீன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.அதனைத்தொடர்ந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொலன்னாவைப்பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் பெரோஸ் முகம்மத் உரை நிகழ்த்தினார். அவருக்கு நூலாசிரியர் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவம் வழங்கப்பட்டது. இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் மற்றும் 4S அமைப்பினர் நூலாசிரியருக்குப் பொன்னைடைபோர்த்திக் கௌரவம் வழங்கினார். வரவேற்புரையை ஆஷிகா பர்ஷான் வழங்கியதோடு நிகழ்வுகளை ஷிமாரா அலி தொகுத்து வழங்கினார்.