• May 26 2025

மட்டு நகரில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது! சைக்கிளும் மீட்பு!

Thansita / May 25th 2025, 8:38 pm
image

மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களை திருடிய புதூரைச் சேர்ந்த ஒருவரை இன்று  (25) பொலிசார் கைது செய்துள்ளதுடன் சைக்கிளும்  மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு சைக்கிளில் சென்ற நபரொருவர்  அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்த சைக்கிள் காணாமல் போயுள்ளது

இதனை அறிந்து கொண்ட சைக்கிள் உரிமையாளர் அந்த பகுதியில் தேடி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சைக்கிள் திருடிய சம்பவம்  சிசிரி கமராவில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து சைக்கிள் திருடியவரை அடையலாம் கண்டு கொண்டனர்.

இதனை தொடர்ந்து புதூரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடிய ஒரு சைக்கிளை 18 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும் அடுத்த சைக்கிளை 5 ஆயிரம் ரூபாவுக்கு ஈட்டுகடை ஒன்றில் ஈடு வைத்துள்ளமையும் தெரிய வந்தது.

இதையடுத்து இரு சைக்கிள்களையும் மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



மட்டு நகரில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது சைக்கிளும் மீட்பு மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களை திருடிய புதூரைச் சேர்ந்த ஒருவரை இன்று  (25) பொலிசார் கைது செய்துள்ளதுடன் சைக்கிளும்  மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுநகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு சைக்கிளில் சென்ற நபரொருவர்  அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்த சைக்கிள் காணாமல் போயுள்ளதுஇதனை அறிந்து கொண்ட சைக்கிள் உரிமையாளர் அந்த பகுதியில் தேடி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சைக்கிள் திருடிய சம்பவம்  சிசிரி கமராவில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து சைக்கிள் திருடியவரை அடையலாம் கண்டு கொண்டனர்.இதனை தொடர்ந்து புதூரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடிய ஒரு சைக்கிளை 18 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும் அடுத்த சைக்கிளை 5 ஆயிரம் ரூபாவுக்கு ஈட்டுகடை ஒன்றில் ஈடு வைத்துள்ளமையும் தெரிய வந்தது.இதையடுத்து இரு சைக்கிள்களையும் மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement